tamilnadu

img

‘ஸ்வச் பாரத்’ திட்டத்தில் நடந்த ரூ. 540 கோடி ஊழல்? ம.பி. மாநிலத்தில் கட்டாத 4.5 லட்சம் கழிப்பறைகளை கட்டியதாக கணக்கு

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜக ஆட்சி நடந்தபோது ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டியதாக ரூ. 540 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பது வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கிறது. பிரதமர் மோடி, 2014-இல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக் கான கழிப்பறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்தார். 

5 ஆண்டுகள் கழித்து, 2019 மக்களவைத் தேர்தலின்போது, ‘நாட்டில் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களே இல்லை’ என்ற சாதனையை ‘ஸ்வச் பாரத்’ திட்டம் மூலம் நிகழ்த்தி இருப்பதாக, தம்பட்டமும் அடித்துக்கொண்டார்.இந்நிலையில்தான், மத்தியப்பிர தேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்தபோது, 4 லட்சத்து 50 ஆயிரம் கட்டாத கழிப்பறைகளைக் கட்டியதாகக் கூறி,ரூ. 540 கோடியை ஊழல் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.கட்டப்பட்ட கழிப்பறைகளின் புகைப்படம் என்று அரசுக்கு அனுப்பப்பட்டிருந்த புகைப்படங்களை ஜிபிஎஸ் மூலம் நவீனமுறையில் ஆய்வு செய்துபார்த்தபோது, ஆவணங்களில் குறிப்பிட்ட இடங்களில் கழிப்பறைகளே கட்டப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.கிராம மக்களின் பெயர்களில் கழிப்பறை கட்டப்பட்டு விட்டதாகவும், பயனாளிகளுக்கு தலா ரூ. 12 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருந் தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக, குணா மாவட்டம் ‘லக்காட்ஜாம்’ என்ற ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் இதுதொடர்பாக எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்தே, 2017-ஆம் ஆண்டில் இந்தவிவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. லக்காட்ஜாம் ஊராட்சியில், சைத்ராம், ராம் கிஷோர், கன்ஸ்ராஜ், ஷாமபுத்யால் ஆகியோரின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டாமலேயே கட்டியதாக காட்டப்பட்டுள்ளது. அரசின் ஆவணங்களுக்கு, பக்கத்து வீட்டுக் கழிப்பறைகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து கழிப்பறை முறை கேடு தொடர்பாக, ஆய்வு நடத்திய அதிகாரிகள் சைத்ராம், ராம் கிஷோர், கன்ஸ்ராஜ், ஷாமபுத்யால் ஆகியோ ருக்கு, 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.லக்காட்ஜாம் ஊராட்சியைப் போலவே, மாநிலம் முழுவதும் இதே போல சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் கட்டாதகழிப்பறைகளின் பெயரால் ரூ. 540 கோடி சூறையாடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்குத் தெரியாமல் கழிப்பறை ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.தற்போதைய மாநில காங்கிரஸ் அரசும், கழிப்பறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 300 அதிகாரிகளை மாநிலம் முழுவதும் அனுப்பியுள்ளது.இதனிடையே, ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மத்தியப்பிரதேச துணை இயக்குநர் அஜித் திவாரி, கழிப்பறை ஊழல் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஊழலுக்கு பொதுமக்களை பொறுப்பாக்கியுள்ளார்.“இந்தத் திட்டத்தில் இரண்டு வழிகளில் பயனாளர்களுக்குப் பணத்தை அளித்துள்ளோம்.

கழிப்பறைகள் கட்டப்பட்டதா, என சரி பார்த்தபின்பு ஊராட்சி கள் மூலம் பணம் வழங்குவது மற்றும், பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் அரசாங்கமே நேரடியாக பணத்தை செலுத்துவது என்ற முறையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் தரவுகளின் படி பயனாளர்களுக்குப் பணம் சென்றடைந்துவிட்டது. ஆனால், அதை அவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி யுள்ளனர். எனவே, காணாமல் போன கழிவறைகளுக்குச் சம்பந்தப்பட்ட மக்கள் தான் பொறுப்பு” என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய கணக்கெடுப்பில், சுமார் 4.5 லட்சம் கழிப்பறை களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் தங்களுக்குக் கிடைத்துள்ளதால், மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு
ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிரு ப்பதாகவும் கூறியுள்ளார்.

;